Saturday, March 5, 2011

மைத்ரி


நம் நாட்டில் ஏறக்குறைய 3 கோடி மக்கள் மனவளர்ச்சி குன்றியோர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இவர்களுள் ஐந்து சதவிகிதத்தினர்தான் தேவையான கல்வி, பயிற்ச்சி மற்றும் வசதிகள் பெற்றிருப்பதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

பயன் வேண்டுவோருக்கும் பயன் பெறுவோருக்கும் இடையே உள்ள இவ்வளவு பெரிய இடைவெளியை சிறிதேனும் குறைக்கும் நோக்கத்துடன் மனவள்ர்ச்சி குன்றியோரின் பெற்றோர்களால் 1994ல் சென்னையில் துவங்கப்பட்ட சேவை நிறுவனம் தான் “மைத்ரி” 

மூன்றே குழந்தைகளுடன் துவங்கப்பட்ட மையம் இன்று 300 குழந்தைகளை பயிற்றுவிக்கும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. சென்னையில் பெரம்பூர், தாம்பரம், மேற்கு மாம்பலம், கொளத்தூர், கே.கே. நகர், உள்ளகரம் ஆகிய 6 இடங்களில் 70க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுடனும் திறன் ஊக்க வல்லுநர்களுடனும் {Occupational & Physico Therapists} பணி புரிகிறார்கள்.

மனவள்ர்ச்சி குன்றியிருந்தாலும் இவர்களிடம் உள்ள சில திறமைகளை கண்டெடுத்து, வளர்த்து அவர்கள் தங்களுக்கும் பிறர்க்கும் பயனுள்ள வாழ்க்கை வாழ வழிகாட்டும் மைத்ரி, நலன் விரும்பும் பெற்றொரும், நல்மனமுள்ள பல்ரின் ஆதரவோடு தற்போது வளர்ந்து வருகிறது.

வளர்ச்சியடைந்த அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் அரசு பள்ளிகளிலேயே இம்மாதிரி சிறப்புக் குழந்தைகளின் கல்விக்கும் இடம் ஒதுக்கி உதவுகிறார்கள். நம் நாட்டில் இது போன்ற சமூக நிறுவனங்களால் மட்டுமே செய்ய இயலுகிறது. இதற்கு தேவையான உதவிகளுக்கும் சமூகத்திடம்தான் பெற்று செயல்படவும் முடிகிறது.

இலாப நோக்கில்லாமல் அன்பளிப்புகளால் மட்டுமே நடக்கும் நிறுவனம் என்பதை கடந்த சில மாதங்களாக நானும் இணைந்து பணியாற்றுவதால் நன்கறிவேன். இந்நிறுவனத்தின் கூட்டங்களில் கலந்து கொண்டு என்னால் இயன்ற சிறு உதவிகளையும் செய்து வருகிறேன். அதனால் வலைப்பூவிலும் அதிகம் நேரம் ஒதுக்க முடியவில்லை. 

இன்னும் பல பள்ளிகளை தொடங்கவும் இருக்கும் பள்ளிகளை மேம்படுத்தவும் இவர்கள் ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.

More Info :http://butterflysurya.blogspot.com/

No comments:

Post a Comment